உலக போர்களால் தூண்டப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி, ஆயுதங்களிலும் புதுமையை ஏற்படுத்தி வருகிறது. அதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM) ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட இவ்வகை ஏவுகணைகள் சில வலுவான நாடுகளின் கைகளில் மட்டுமே உள்ளன.
1. ரஷ்யா – RS-28 Sarmat 18,000 கிமீ வரை தாக்கும் திறன்; அணுசக்தி இயங்கும் Burevestnik குரூஸ் ஏவுகணையும் இவர்களிடம் உள்ளது.
2. அமெரிக்கா – Minuteman III 13,000 கிமீ வரை தாக்கும் திறன்; நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தே ஏவ முடியும்.
3. சீனா – DF-41 ஏவுகணைகள் 12,000 முதல் 15,000 கிமீ வரை தாக்கக் கூடியவை.
4. இங்கிலாந்து – Trident II நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைகள் 12,000 கிமீ வரை செல்லும்.
5. பிரான்ஸ் – M51 ஏவுகணைகள் 10,000 கிமீ தூரம் தாக்கும் திறன் கொண்டவை.
வடகொரியாவும் ICBM வைத்துள்ள நிலையில், இந்தியா தற்போது பிராந்திய பாதுகாப்புக்கான ஏவுகணைகளில் கவனம் செலுத்தி வருகிறது. அக்னி-5 5,000 கிமீ தூரம் தாக்கும் திறன் கொண்டது; இது ஆசியாவில், குறிப்பாக சீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.













