இந்தியா, நடுவர் நீதிமன்றத்தின் சட்டபூர்வ தன்மையை ஒருபோதும் ஏற்றதில்லை என்றும், அதன் தீர்ப்புகள் அதிகார வரம்பற்றவை மற்றும் சட்ட ரீதியான நிலை இல்லாதவை என்றும் வெளிவிவகார பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இத்தீர்ப்புகள், இந்தியா தனது நீர்நிலைகளைப் பயன்படுத்தும் உரிமைகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த ஜூன் 27 அன்று வெளியிடப்பட்ட இந்தியாவின் அறிவிப்பின்படி, பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருவதை கண்டித்து, பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும், இந்திய அரசின் இறையாண்மை முடிவின் அடிப்படையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.













