“சுதந்திரத்தின் அருமையை காத்த வீரர்கள் – அவர்களின் தியாகத்தை நினைவில் கொள்வோம்: அண்ணாமலை”
அவர் வெளியிட்ட அறிக்கையில், நாட்டிற்கு சுதந்திரம் என்ற மதிப்புமிக்க பரிசையும், அரசியலமைப்பின் தளத்தை அமைத்த பார்வையும் தந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் அழிக்க முடியாத வீரத்தையும் தியாகத்தையும் நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும் என்றார்.
அவர்களின் உறுதியான மனப்பான்மை, போராட்டம், மற்றும் விடாமுயற்சி இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கியதாகவும், அந்த மரபை நிலைநிறுத்த நாம் ஒற்றுமையை காக்கவும், பன்முகத்தன்மையை கொண்டாடவும், வலுவான மற்றும் தன்னம்பிக்கை மிகுந்த இந்தியாவை கட்டியெழுப்ப உழைக்கவும் வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தினார்.













