சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “ஒவ்வொரு குடிமகனும் தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றி, நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
தேசிய ஒற்றுமை மற்றும் தேசப் பற்றை வெளிப்படுத்தும் இந்த செயலில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடி தொடங்கி வைத்த ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தில் பங்கேற்றதை பெருமையாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு இந்தியரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 
			 
                                
 
                                 
		
 
							










