அம்மாபாளையத்தை சேர்ந்த ரவி, பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல ஆட்டோவில் வந்தபோது, வழிமறித்த இருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். கடுமையாக காயமடைந்த ரவி போலீசாரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தப்பியோடிய மர்ம நபர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.