பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சியில், ரூ.4 கோடி 91 லட்சம் மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் திமுக எம்பி அருண் நேரு பங்கேற்றார்.
அந்நேரம், மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பல பெண்கள், தங்கள் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லையென குற்றஞ்சாட்டி, எம்பியை முற்றுகையிட்டனர். கேள்விகளுக்கு தெளிவான பதில் அளிக்க முடியாமல் தவித்த அருண் நேரு மற்றும் எம்எல்ஏ பிரபாகரன், அவசரமாக அங்கிருந்து புறப்பட்டனர்.
இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பெண்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பினர்.













