விடுதலைக்குப் பின், தன் தேவைகளும் சர்வதேச சூழ்நிலைகளும் அடிப்படையாகக் கொண்டு இந்தியா வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்தது. நேருவின் அணிசேரா கொள்கையிலிருந்து 2014-ல் பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய “தேசம் முதலில்” என்ற பன்முகத் துறை கொள்கை வரை, இந்தியாவின் ராஜதந்திரம் பல மாற்றங்களை கண்டது.
மோடி தலைமையில், இந்தியா குவாட், பிரிக்ஸ், ஜி7, ஷாங்காய் ஒத்துழைப்பு போன்ற பல்வேறு உலக மேடைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தன்னிறைவு, தாராள உதவி, மற்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களால், இந்தியா 160-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்கியது. 65 நாடுகளுக்கு மேல் $48 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உதவி செய்து, மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கிடையில் நட்பு பாலமாக திகழ்கிறது.
இன்றைய உலக அரசியல் மேடையில், விஸ்வாமித்திரன் போல் வழிநடத்தும் பிரதமர் மோடி, இந்தியாவை விஸ்வகுரு எனும் உயரிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்.













