வண்ணமயமாக அரங்கேறிய..
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியின் ‘விட்டாலியா 2025’ முதலாம் ஆண்டு விளையாட்டு விழா!
திண்டுக்கல், லயோலா டெக் பள்ளியில் முதலாம் ஆண்டு விளையாட்டு விழாவான, ‘விட்டாலியா 2025’ சிறப்பாக நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளர்கள்
சிறப்பு அழைப்பாளராக ‘சர்வதேச ஃபிபா கால்பந்தாட்ட நடுவர்’ ரூபாதேவி மற்றும் தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டி, தமிழக வீராங்கனை கேரம் ஷரான் (லயோலா பள்ளியில் பணிபுரியும் அலுவலக பணியாளர் சரோஜினி அவர்களின் மகள்), இயேசு சபை மதுரை மாநிலத் தலைவர் அருட்தந்தை தாமஸ் அமிர்தம், மாநிலப் பொருளாளர் அருட்தந்தை ஸ்டீபன் லூயிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அருட்தந்தையர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் தாளாளர், முதல்வர், ஜான் பால் பள்ளியின் முதல்வர் அனைவருக்கும் பள்ளியின் பேண்ட் மாணவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து, மேளதாளத்துடன் வரவேற்றனர்.

பள்ளியின் துணை தலைமை மாணவன் தருண் கிருஷ்ணா வரவேற்றார். மாணவி அப்ரா மரியம் இறைவழிபாட்டிற்கு அனைவரையும் ஒருங்கினணத்தார். கணித ஆசிரியர் ரஞ்சனா இறை வழிபாட்டைக் கூறினார்.


மாணவி அமோக யாழினி,
கொடி ஏற்றி, சிறப்பு விருந்தினர்களை அழைத்தார். மாணவர் அணித்தலைவர் கார்த்திக் வரவேற்பு, பள்ளி முதல்வர் நான்சி வரவேற்புரையாற்றினர்.

பள்ளியின் இயக்குனர் கிளாட்வின், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஜெஸ்யூட் அருட்தந்தையர்கள், செயின்ட் மேரிஸ் பள்ளி , தாளாளர், தலைமை ஆசிரியர், அருட்தந்தை ஸ்டீபன் மற்றும் அதிபர் மரி வளன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

- விதவிதமான விளையாட்டுப் போட்டிகள்
கேரம் ஷரான் மற்றும் சுற்றுச்சூழல் சாம்பியன் ரூபா தேவி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நத்தம் தேவா குழுவினர், சமாதான புறாவை பறக்கவிட்டு ‘விட்டாலயா 2025’ விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தனர்.

பள்ளித் தலைமை மாணவன் ஜெப்ரி, துணை தலைமை மாணவன் தருண் கிருஷ்ணா கொடியை ஏந்தி வர 5 அணிகளின் தலைமை மாணவர்களும் மஞ்சள், சிகப்பு, பச்சை, ஊதா, நீல நிற கொடிகளை ஏந்தி வர அணி வகுப்பு சிறப்பாக இருந்தது. மாணவர்கள் ஒரே மாதிரியாக அசைந்தும், நகர்ந்தும், ஒற்றுமையை தங்கள் அணிவகுப்பின் மூலம் வெளிப்படுத்தினர்.

நீரின் முக்கியத்துவம், மழை நீரின் சேமிப்பின் அவசியம், பசுமையின் அவசியம் குறித்த மழலைச் செல்வங்களின் அணிவகுப்பு நடந்தது. கண்ணை கவரும் விதமாக, விலங்குகளின் உடை அணிந்து விலங்குகள், பறவைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடனம், கோள், அழிப்பானுடன் ட்ரில் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

பின்னர், பெற்றோர்களுக்கான கால்பந்து, கையுந்து பந்து, பந்துவீச்சு, கூடைப்பந்து, பெண்கள் கொக்கோ, இறகுப்பந்து போட்டி ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற பெற்றோருக்கு பள்ளியின் இயக்குனர் கிளாட்வின், முதல்வர் நான்சி பரிசுகள் வழங்கினர். பெற்றோர்களின் சார்பில் பல போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெல்சன் தாஸ், ‘ஸ்போர்ட்ஸ் ஐகான்’ பட்டத்தை வென்றார்.

மழலையர்களுக்கு நான்கு விதமான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
பள்ளியில் முன்னதாகவே நடத்தப்பட்ட ஈட்டி எறிதல் குண்டு எறிதல், கூடைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் மற்றும் அழைப்பு விருந்தினர் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினர்.
- அத்தனையும் வண்ணமயம்!
நிகழ்வில் பள்ளியின் லுமினா மஞ்சள் நிற அணி மாணவர்கள், இக்னஸ் சிவப்பு நிற அணி மாணவர்கள், வெரிடாஸ் பச்சை நிற அணி மாணவர்கள், நெக்ஸா ஊதா நிற அணி மாணவர்கள், பேக்ஸ் நீல நிற அணி மாணவர்கள் அணி அணியாக வந்து ட்ரில் செய்தனர்.
மஞ்சள் நிற லுமினா ஹவுஸ் நிற மாணவர்கள், வளையத்தில் காகித பூக்கள் சுற்றி ஒற்றுமையின் வலிமையை நாடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தினர். இக்னீஷ் சிவப்பு நிற அணியினர், சேலைகளை வைத்து வண்ணமயமாக டெல் செய்தனர். வெரிடாஸ் பச்சை நிற அணியினர், சதுர பெட்டியை வைத்து ஆடியும் நாட்டில் இருக்கக்கூடிய நிலைமைகளை தலைவர்களை வரிசையாக நிற்க வைத்து நீதி தேவதையின் கண்ணை திறக்க ஒரு நாடகமாக ட்ரில் செய்தனர்.

நெக்ஸா ஊதா நிற மாணவர்கள் ‘லிசும்’ என்ற கருவியைப் பயன்படுத்தி, ஒரே அசைவாகவும் நகர்வாகவும் ஆடினர். இதில் அனைத்து நாட்டு கொடியையும் முன்னிறுத்தி, வளர்ச்சி & வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நாடகம், நடனத்தை நடத்தினர்.
இறுதியாக பேக்ஸ் நீல நிற அணி மாணவர்கள், தங்கள் கையில் வண்ண ரிப்பன்களை வைத்து ‘அமைதி எங்கே உள்ளது?’ என்ற தலைப்பில் அமைதிக்காக என்னென்ன செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது என்பதை நடனம் ஆகவும் டிரில் ஆகவும் செய்து காண்பித்தனர்.
- தன்னார்வலராக இணைந்த பெற்றோர்!
சிறப்பு விருந்தினர் ரூபாவதி பேசுகையில் “இதே விளையாட்டு மைதானத்தில் பயிற்சி எடுத்தேன். இதே மைதானத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதில் பெருமிதம் அடைகிறேன். கடின உழைப்பு மற்றும் நேர்மை ஆகிய விழுமியங்கள் நமது வாழ்வை வளமாக்குபவை” என்று கூறி மகிழ்ந்தார்.
அருட்தந்தையர்கள் மரிவளன் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கருத்துரை வழங்கினார். பிறகு மாணவர்களுக்கான ஓட்டப் பந்தயப் போட்டி, தொடர் ஓட்டப்பந்தய போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவி சதுரகரா மற்றும் மாணவர் கெளதம் ஆகிய இருவரும் தங்களின் அணிகளுக்கு அதிக புள்ளிகள் பெற்று தனிப்பட்ட சாம்பியன் பட்டத்தினை வென்றார்கள்.
அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து இவ்வாண்டின் சாம்பியன் பட்டத்தை நெக்ஸா என்னும் வைலட் அணியினர் வென்றனர். பேக்ஸ் என்னும் ஊதா அணியினர், இரண்டாமிடம் பிடித்தனர்.
சுற்றுச்சூழல் சாம்பியன் விருது பெற்ற நத்தம் தேவா, பள்ளிக்கு 50 மரக்கன்றுகளை இலவசமாக தந்தார்.
தலைமை உடற்பயிற்சி ஆசிரியர் பிரான்சிஸ் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியை இருவரும் விளையாட்டு விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து, வழிநடத்திச்
சென்றனர். ஆஷா மற்றும் வினோத் (எ) தமிழ் நேசன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்..
பெற்றோர்களும் தன்னார்வலராக இணைந்து கொண்டு, பணிகளை செய்து முடித்தனர். அவர்களை பள்ளியின் இயக்குனர் வாழ்த்தினார். அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழாவை சிறப்பித்தோருக்கும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் நான்சி நன்றி தெரிவித்தார்
இறுதியில் தேசிய கீதத்துடன் பள்ளி விளையாட்டு விழா ‘விட்டாலயா 2025’ முடிவு பெற்றது.











































