
திண்டுக்கல் அக்டோபர் 28.
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான கொக்கோ போட்டி நடைபெற்றது .

இந்த போட்டியில்
இரண்டு நிறங்களில் அணிகள் பிரிக்கப்பட்டன மஞ்சள், சிவப்பு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது..

பள்ளி இயக்குநர் கிளாட்வின்,முதல்வர் நான்சி விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்கள்…
முதல் சுற்றாக 15 நிமிடங்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற அணியினர் கலந்துகொண்டு விளையாடினர்.
10 நிமிட இடைவெளிக்குப் பிறகு

இரண்டாவது சுற்றாக சிகப்பு மற்றும் மஞ்சள் நிற அணியினர் விளையாடினர்.

பெண்களின் இரு அணியினரும் வேகமாகவும் ஆர்வமாகவும்
விளையாடினர்.. இதில் சிலர் கீழே விழுந்தும் அடிபட்டும் கூட அதை பொருட்படுத்தாமல் விளையாட்டில் கவனம் சிதையாமல் விளையாடினர்

இறுதி சுற்றில் மஞ்சள் நிற அணியினர்
30: 28 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

விளையாட்டு போட்டியினை ஆசிரியர்கள் பள்ளி ஊழியர்கள் மற்றும் பெஸ்கி கல்லூரியின் முன்னாள் அருட்தந்தைகள் என ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்
மாணவர்கள் தங்களின் பெற்றோர்களை கர ஒலி எழுப்பி உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்
நாளை மகளிருக்கான துரோபால் போட்டிகள் 4:15 மணி அளவில் லயோலா டெக் பள்ளியில் நடைபெறும்.
வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கு பள்ளியின் விளையாட்டு விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும்.
வெற்றி பெற்ற பெண்களும் விளையாண்ட வீரர்களும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு விளையாடுகிறோம்….. மனம் மகிழ்வாக இருக்கிறது ..இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கும் தங்களுடைய அன்பான கணவருக்கும் நன்றிகளை தெரிவித்தனர் ….














