திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து போட்டி நடைபெற்றது விளையாட்டு போட்டியில் இரண்டு அணிகளாக நீல நிறம் மற்றும் சிகப்பு நிற அணிகளாக மொத்தம் 24 பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்..

இவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்ட கால்பந்து மைதானத்தில் பெற்றோர்களுக்கான
கால்பந்து விளையாட்டு பொடியை
பள்ளி முதல்வர் நான்சி மற்றும் பள்ளியின் இயக்குனர் கிளாட்வின் அவர்கள் போட்டியை தொடங்கி வைத்தார்கள் இந்த விளையாட்டுப் போட்டியின் ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்
விளையாட்டு போட்டியை காண பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியின் ஊழியர்கள் பெஸ்கி காலேஜில் இருக்கும் ஓய்வு பெற்ற அருட்தந்தைகள் என அனைவரும் கண்டு களித்தனர்
விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட தங்களது பெற்றோர்களை உற்சாக ப்படுத்தும் விதமாக மாணவர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர்
விளையாட்டின் இறுதியில் நீல நிற அணி 4
சிவப்பு நிறம் 2 கோல் நீல நிற அணி 4:2 என்ற கணக்கில் கோப்பையை வென்றது.
பள்ளி இயக்குனர் கிளாட்வின் மற்றும் பள்ளி முதல்வர் நான்சி அனைத்து பெற்றோர்களையும் பாராட்டி வாழ்த்தினார் …..
இவர்களுக்கு பள்ளியின் விளையாட்டு விழா வின் போது பரிசுகள் வழங்கப்படும்.
நாளை பெற்றோர்களுக்கான பேஸ்கட்பால் போட்டி மாலை 4:15 மணி அளவில் நடைபெறும்..













