திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள ராஜன் விளையாட்டு அரங்கத்தில் ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தின் மூலம் இம்மாதம் 11,12 தேதிகளில்போட்டி நடைபெற்றது.

நான்கு வயது முதல் 16 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது இதில் திண்டுக்கல் மாணவ மாணவிகளும் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்களும் பங்கேற்றனர் கிட்டத்தட்ட 800 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில் திண்டுக்கல்லில் அமைந்துள்ள லயோலா டெக் பள்ளி சப் ஜூனியர் மாணவர்கள் ஓவரால் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்கள்.
பள்ளியில் இருந்து 13 பள்ளி மாணவர் மாணவியர்கள் பங்கேற்றனர் நம்பிக்கையுடனும் திறமையுடனும் தங்கள் சுற்றுகளை நிறைவு செய்து அனைவரும் பதக்கங்களை வென்றனர் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சிறப்பாக விளையாடி பரிசுகளை தட்டிச் சென்றனர்
திண்டுக்கல் ராஜன் ஸ்டேடியத்தின் இயக்குநர் பிரேம்நாத் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த கல்யாணராமன் பாராட்டுகளை தெரிவித்தனர்…

இந்நிகழ்வை பாராட்டும் விதமாக பள்ளி இயக்குநர் அருட்தந்தை கிளாட்வின் , பள்ளி முதல்வர் நான்சி ஆகிய இருவரும் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவித்து பாராட்டுகளை தெரிவித்து சிறப்புரையாற்றினார்கள்.













