திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மயிலாடும்பாறை , வள்ளி நகரை சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் வீட்டிலிருந்து பள்ளி வேண்டும் செல்வதற்காக நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வட மாநிலத்தை சார்ந்த ஒருவன் சிறுவனை கையைப் பிடித்து தரதரவென இழுத்து கடத்தி செல்ல முயன்றுள்ளான் . இதில் அதிர்ச்சி அடைந்த சிறுவன் அழுது கொண்டே கூச்சலிட்டுள்ளான். கூச்சலிட்ட சிறுவனின் முகத்தில் எச்சிலை துப்பியுள்ளான் பின்னர் சிறுவன் அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்து பொதுமக்கள் வந்து சிறுவனை மீட்க முயன்ற பெண்களை தள்ளிவிட்டு சென்ற போது , பொதுமக்கள் கூட்டம் கூடி வடமாநில நபரை தாக்கி ,கட்டி வைத்தனர்,பின்னர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்க பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் விசாரணை செய்த்தில் வட மாநில இளைஞர் அசாம் மாநிலத்தை சேர்ந்த கனு சர்கார் வயது 33 என்பது தெரியவந்த்ததை அடுத்து வட மாநில இளைஞரை அடிவாரம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். பள்ளிக்குச் சென்ற சிறுவனை வட மாநில இளைஞர் கடத்திச் சென்ற சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இவர் மனநலம் பாதித்தவர் என்றும் மது போதையில் இருந்தார் என்றும் தெரியவந்துள்ளது














