திண்டுக்கல், கொடைக்கானல், பெருமாள்மலை, சாமக்காட்டு பள்ளம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் ராஜசேகர்(25) இவரது சகோதரிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது இந்நிலையில் திருமணத்திற்கு வந்த தனது உறவினர் (ராஜசேகருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்) கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தீபிகா என்பவருடன் தங்களது தோட்டம் அமைந்துள்ள சாமக்காட்டு பள்ளம் பகுதியில் ஜீப்பில் சென்ற நிலையில் ஆபத்தான வளைவில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து ஜீப் 100 அடி பள்ளத்தில் உருண்டது. ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் இது குறித்து யாருக்கும் தெரியாத நிலையில் அப்பகுதியில் உள்ள தோட்டத்துப்பகுதியை சேர்ந்த சிலர் ஜீப் உருண்டு கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் ஜீப் அருகே சென்றபோது ராஜசேகர் பலத்த காயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். உறவினர் பெண்ணான தீபிகா இறந்த நிலையில் கிடந்தார். போலீசார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் ராஜசேகரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது தொடர்பாக கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்













