திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் கட்டளை சொத்துக்களை தனிநபர் 28 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து, விற்பனை செய்ததாக இந்து முன்னணி சார்பாக ஆவணங்களுடன் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டு கள ஆய்வு செய்ய முடிவு செய்ததை தொடர்ந்து இன்று தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் செயல் அலுவலர் யுவராஜ், அறங்காவலர் ராமானுஜம் மற்றும் கோவில் ஊழியர்கள் தாடிக்கொம்பு ரோடு வாணி விலாஸ் மேடு அருகே உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து பத்திரப்பதிவு செய்த கோவில் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி -: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் கட்டளை சொத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்த கட்டளை சொத்தை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர் குழு சட்டப்படி நடவடிக்கை எடுத்து விரைவில் மீட்கப்படும் என்று தெரிவித்தார்
R.மோகன கணேஷ் மாவட்ட செய்தியாளர் திண்டுக்கல்













