திண்டுக்கல், சாணார்பட்டியை அடுத்த கோபால்பட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரியும் கஜேந்திரன்(32), இவரது மனைவி சத்யா(26). இவர்கள் கோபால்பட்டி எல்லைநகரில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். சத்யா 10 மாதங்களுக்கு முன் கர்ப்பமானார்.
இந்நிலையில் பிரசவ வலி வந்ததாக தகவல் கிடைக்க கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி, கோபால்பட்டி அரசு மருத்துவ அலுவலர் பிவின்ஆரோன், டாக்டர் சந்தானக்குமார், செவிலியர்கள், சாணார்பட்டி எஸ்.ஐ., பொன் குணசேகரன், வி.ஏ.ஓ.,சுப்புராஜ் ஆகியோர் சத்யா வீட்டிற்கு வந்து மருத்துவமனையில் சேர வற்புறுத்தினர். ஆனால் தம்பதி இருவரும் வீட்டை பூட்டி கொண்டு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். அவர்கள் எந்தவித சமரசத்தையும் ஏற்கவில்லை. கஜேந்திரன் தனது அலைபேசி வீடியோகால் மூலமாக யாரிடமோ பேசி மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். பெண் குழந்தை பிறந்தது குழந்தையின் அழுகுரல் கேட்க ஒரு வழியாக வீட்டின் கதவை கணவன், மனைவி திறந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பெண்குழந்தை பிறந்திருந்தது. மருத்துவம் அறியாத நபர்கள் பிரசவ விஷயத்தில் அபாயகரமான நட வடிக்கையில் ஈடுபட்டது சுகாதாரத் துறையினர், பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
R.மோகன்கணேஷ்,
மாவட்ட செய்தியாளர் திண்டுக்கல்













