விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து அமைப்பினருடன் S.P. ஆலோசனை
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் இந்து அமைப்பினருடன் ஆலோசனை நடைபெற்றது
இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி, சிவசேனா தமிழகம், இந்து தமிழர் கட்சி, இந்து தர்ம சக்தி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் விழாவின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும், அமைதியான சூழலை உருவாக்கவும் காவல்துறை, இந்து அமைப்புகள் மற்றும் ஊர்வலத்தில் பங்கேற்பவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
சிலைகளை நிறுவுதல், ஊர்வலப் பாதைகள், மற்றும் பொது இடங்களில் ஒலிபெருக்கி பயன்பாடு போன்றவற்றை முறைப்படுத்தவும், அரசு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவும் அறிவுறுத்தினார்
விசர்ஜன ஊர்வலங்கள் அமைதியாகவும், எந்தவித பாதிப்பும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்ய, வழிமுறைகள் மற்றும் பொறுப்பாளர்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ADSP-கள், DSP- கள், இன்ஸ்பெக்டர்கள், இந்து மக்கள் கட்சி தர்மா, சிவசேனா தமிழகம் C.K.பாலாஜி, இந்து தமிழர் கட்சி ராமரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்
R.மோகன் கணேஷ் மாவட்ட செய்தியாளர் திண்டுக்கல்













