விநாயகர் சதுர்த்தி விழாயொட்டி
தேனி மாவட்டத்தில் தயாராகும் களிமண் சிலைகள் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை மாசு படுத்தாது
விநாயகா சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை மாசு படுத்தாத களிமண் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் தேனி பொம்மையை கவுண்டன்பட்டி, சின்னமனூர், போடி ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் விசேஷமாக சின்னமனூரில் மட்டும் களிமண்ணால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. மற்ற இடங்களில் அட்டைகள் மூலம் சிலைகள் செய்யப்படுகின்றன. இதுகுறித்து நமக்கு அளித்த சிறப்பு பேட்டி, சின்னமனூரை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி முருகன் கூறுகையில், சுடப்படாத களிமண் மூலம் சிலைகளை செய்தால் அது தண்ணீரில் எளிதாக கரையும். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் மாசுபடாது. ஆனால் களிமண் சிலை எடை கூடுதலாக இருப்பதால் அதனை வாங்க பலர் ஆர்வம் காட்டுவதில்லை, 3 அடி உயர சிலை தயாரிக்க 2 நாட்களும், 6 அடி உயரம் கொண்ட சிலை தயாரிக்க 3 நாட்கள் ஆகும். இந்த சிலைகள் ரூபாய் 1500 முதல் ரூ.7000 ஆயிரம் வரை விலை போகிறது. கடந்த காலங்களில் குளங்களில் களிமண் இலவசமாக கிடைத்தது. ஆனால் தற்போது விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் சிலை செய்ய தேவைப்படும் மூலப்பொருட்களான நெல் உமி, தேங்காய் நார், களிமண் விலையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தயாரிப்பு செலவு போக மிஞ்சுவது கூலி மட்டுமே, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிலைகள் விற்பனை நடக்கும். மற்ற நாட்களில் மண்பாண்டங்கள் செய்வோம். ஆனால் எவர்சில்வர் பாத்திர மோகத்தால் மண்பாண்டகளை யாரும் வாங்குவதில்லை, இதனால் இந்த தொழில் செய்து வந்த பலர், மாற்று வேலைக்கு சென்று விட்டனர். இதற்கிடையில் பண்டிகை, கோவில் திருவிழாவின் போது மட்டுமே சிலைகள் விற்பனையாகிறது.இதனால் எங்கள் தொழில் நாளுக்கு நாள் நசிந்து வருகிறது. சிலைகள் வைக்க காவல்துறையினர் கடும் கட்டுப்பாடு விதித்திருப்பதால் சிலைகள் எண்ணிக்கை விற்பனை குறைந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் 5 நாட்கள் மட்டும் உள்ளது. மாவட்ட காவல்துறையினர் கட்டுப்பாடுகளை சிறிது தளர்த்தி, கூடுதல் சிலைகள் வைக்க அனுமதி வழங்கினால் நசிந்து வரும் எங்கள் தொழிலை ஓரளவு காப்பாற்றுக்கொள்ள முடியும். என மனவேதனையுன் கூறினார்
ஆர்.சௌந்தர்
சிறப்பு நிருபர்













