திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை DSP. செந்தில்குமார் மேற்பார்வையில் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதம் தலைமையில் சார்பு ஆய்வாளர் சேக்அப்துல்லா மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது
G.தும்மலபட்டி பகுதியில் கடை,வீடு மற்றும் பைக்கில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் பதுக்கி வைத்திருந்த G.தும்மலபட்டி சேர்ந்த நாட்ராயன் மனைவி மல்லிகா(60), சலீம் மனைவி லைனாபானு(25) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 16 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
R.மோகன் கணேஷ் மாவட்ட செய்தியாளர் திண்டுக்கல்













