திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் கையில் வீச்சருவாளுடன் வாலிபர் சுற்றித்திரிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இது குறித்து மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கையில் வீச்சு அருவாளுடன் சுற்றிய வாலிபர் நத்தம், அண்ணாநகரை சேர்ந்த ரஹ்மத்துல்லா மகன் ரபிக்ராஜா (எ) அமு(22) என்றும் இவர் நத்தம் பேருந்து நிலையத்தில் கையில் வீச்சருவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதும் வியாபாரிகளை கடை அடைக்க கூறி ரகலையில் ஈடுபட்டதும்,
நத்தம் குட்டூர் பகுதி நந்தகுமார் சேர்ந்த என்பவரிடம் வீச்சருவாளை காட்டி மோதிரத்தை பிடுங்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதும் தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் ரபிக்ராஜா (எ) அமு-வை கைது செய்தனர்.
மேலும் ரபிக்ராஜா (எ) அமு மீது கஞ்சா வழக்கு, வழிப்பறி, கொலை மிரட்டல், உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரபிக்ராஜா (எ) அமு – வை போலீசார் கைது செய்து உடல் பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும் நீதிமன்ற வளாகத்திலும் போலீசார் மற்றும் ஊழியர்களிடம் தகராறு ஈடுபட்டார். என்று கூறப்படுகிறது
R. மோகன்கணேஷ் திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்













