திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் பேருந்துக்காக மாணவர்கள், அரசு அலுவலர்கள், கூலித் தொழிலாளர்கள் காத்துக் கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் வீச்சு அருவாளுடன் பேருந்து நிலையத்தில் சுற்றியது
அங்கிருந்தவர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல்
நத்தம் பேருந்து நிலையம் பகுதியில் மாலை நேரத்தில் போலீசார் முறையாக ரோந்து சென்று இருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுத்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
R. மோகன் கணேஷ் திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்













