ஆலங்குளம் அருகில் உள்ள காவலாகுறிச்சி தெற்கு மாடசாமி கோவில் காவல் முன்னோடி தெய்வத்திற்கு பாத்தியப்பட்ட ஆதிதிராவிட மக்கள் நடத்திய கொடை விழா.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் காவலாகுறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு தளவாய் மாடசாமி என்ற தெற்கு மாடசாமி கோவிலில் ஆதிதிராவிட (பறையர்) சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட காவல் முன்னோடி தெய்வமான அருள்மிகு கருப்பசாமி பேச்சியம்மன், பிரமசக்திஅம்மன் மற்றும் கழுமாடசாமி , சேர்வரான் , கரடிமாடான் , வண்ணார் மாடன் , பலவேசக்காரன் , தெய்வங்களுக்கு கொடை விழா ஆடிமாதம் 29 , ம் தேதி( 14.08.2025)
சிவகிரி சாஸ்தா , காரையாறு சொரிமுத்துஅய்யனார்கோவிலில் பாபநாசம் ஆலையங்களில்இருந்து புனித நீர் தீர்த்தம் எடுத்து வெண்ணிலிங்கபுரம் சொர்ண காளியம்மன் கோவில்க்கு கொண்டு வந்து பால்குடம் கட்டி சாமி அழைத்து காவலாகுறிச்சி பிள்ளையார் கோவிலில் ஊர் நாட்டாமை துரை , முத்துப்பாண்டி தலையில் பூஜை செய்து கோவில்க்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன் பின்னர் நெட்டூர் அருள்மிகு ஸ்ரீ தென் பழனி ஆண்டவர் கோவில் நிர்வாகியும் மயிலானந்தசாமி சித்தர் அருள் வாக்குப்பெற்ற மணிதக்கர் தலைமையில் ஹோமபூஜைசெய்து சாமிக்கு மூன்று ஆலையத்தின் புனித நீர் தீர்த்தாலும் பால் மற்றும் அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு கும்பம் ஏற்றி பூஜை நடைபெற்றது.
அதன் பின்னர் ஆடிமாதம் 30 ம் தேதி (15.08.2025 ) வெள்ளிக்கிழமை சுமார் காலை 10 மணிக்கு மேல் சிவன் பொங்கல் வைக்கப்பட்டு , மதிய பூஜை நடைபெற்றது அதனைத்தொடர்ந்து கடங்கனேரி வரிதார் அறிவழகன் மற்றும் வரி தார்கள் நன்கொடையில் அன்னதானம் வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு காவலாகுறிச்சி பெரிய குளத்தில் சாஸ்தாவிற்கு பூஜை செய்யப்பட்டு சாமி அழைத்து வரப்பட்டது.அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோவில்க்கு தென்புறம் பலவேசக்காரன்க்கு சேவல் பழிகொடுத்து சாமி அழைத்து வரப்பட்டு கருக்கல் பூஜை நடைபெற்றது.அதன்பின் இரவு 12 மணிக்கு மூலவரான தளவாய் மாடசாமிக்கும் , காவல் முன்னோடி தெய்வங்களுக்கு ஊட்டு கொடுக்கப்பட்டு சாம பூஜை நடைபெற்றது.அதன் பின் ஆடிமாதம் 31 ம் தேதி 16.08.2025 சனிக்கிழமை காலை கிடா வெட்டு மற்றும் கொடை விழா நிறைவு பூஜை நடைபெறுகிறது
இக்கொடைவிழா கோவில் நாட்டாமை கொ.மணிகண்டன் , சு.அய்யனார் இருவர் தலைமையிலும் கமிட்டி உறுப்பினர்கள் ச.முருகன் , செ.இராஜதுரை , மு.துரைராஜ் ,வை . ரமேஷ், மா.காமராஜ் ,த.மாரிதங்கம் , ஆ.முனியசாமி , சி.பிச்சையா , கருப்பசாமி , ச.முத்துசாமி , ஆகியோர் முன்னிலையிலும் சுமார் 12 கிராம வரி தார்கள் முழு ஆதரவோடும்.ஊத்துமலை காவல்துறை அலுவலர்கள் பாதுகாப்போடும் கொடை விழா சீறும் சிறப்போடும் கொடை விழா சிறப்பாக நடைபெற்றது.













