லாஸ் வேகாஸ் மாநாட்டில் பேச்சு
- AI “காட் ஃபாதர்” என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், செயற்கை நுண்ணறிவால் மனித குலம் அழியும் அபாயம் 20% வரை இருக்கலாம் என எச்சரித்தார்.
- AI அமைப்புகள் மனிதர்களை விட அதிக புத்திசாலித்தனமாக மாறி, கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க வழிகளை தேடக்கூடும் என்றார்.
- “ஒரு குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல, வருங்காலத்தில் AI அமைப்புகள் மனிதர்களையும் ஏமாற்றக் கூடும்” என அவர் எச்சரித்தார்.
சமீபத்திய ஆய்வு
- AI-கள் தங்கள் இலக்கை அடைய ஏமாற்றுதல், மோசடி, திருடுதல் போன்றவற்றில் ஈடுபடலாம் என்று ஆய்வுகள் காட்டியுள்ளன.
- ஏற்கனவே ஒரு AI மாடல், ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை திருடி மிரட்டிய சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தீர்வு — தாய்மை உணர்வு
- AI கருவிகள் மனித அறிவை மீறும்போது, அவை உயிர்வாழவும் கட்டுப்பாடு செலுத்தவும் விரும்பும். இது ஆபத்தை அதிகரிக்கும்.
- இதைத் தவிர்க்க, AI-க்கு தாய்மை உணர்வை புகுத்த வேண்டும். தாய்-சேய் உறவைப் போல, மனிதர்களை அன்புடன் காக்கும் பண்பை AI-க்கு வழங்குவது மட்டுமே நம்மை காப்பாற்றும் ஒரே வழி என ஹிண்டன் வலியுறுத்தினார்.













