திண்டுக்கல்லில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் நமது நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில இணை செயலாளர் சுப்பிரமணியம் கொடியேற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக ரயில்வே ஓய்வூதிய சங்கச் செயலாளர் ஜெகநாதர், நாகல் நகர் அனைத்து வியாபாரிகள் நல சங்க தலைவர் நம்பிக்கை நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் ராஜேஷ் கண்ணன் நன்றி உரையாற்றினார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன













