தஞ்சை மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை ஆதரவற்ற சடலத்தை கரந்தை வடக்கு வாசல் சுடுகாட்டில் நேரில் சென்று இறுதி நல்லடக்கம் செய்யப்பட்ட நிகழ்வு பெண்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை அளிக்கிறது ஆண்களுக்கு நிகர் பெண்களும் சமுதாயத்தில் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கூறினார்
கோபுரம் பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோவிந்தராஜ் அறிவுறுத்தலின் பெயரில்
கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் உதயகுமார் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் உத்தரவின் பெயரில் இரண்டாம் நிலை காவலர் அன்பரசன் முன்னிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த முகுந்தன் வயது 55 தகப்பனார் பெயர் ஞானகோபால் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் நலக்குறைவால் காலமானார்.
அவரைப் பற்றி தகவல் ஏதேனும் தெரியாத நிலையில் அவரது உடல் ஆனது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு
நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு இணங்க 14.08.2025 மாலை 05.00 மணியளவில் தஞ்சை வடக்கு வாசல் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படது.
இந்த இறுதி நிகழ்வில் தஞ்சை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய்லலிதாம்பிகை கோபுரம் பவுண்டேஷன் தஞ்சை மாவட்ட தலைவர் ராஜேஷ் கிழக்கு மண்டல கௌரவத் தலைவர் கண்ணாடி குமார் மாவட்டச் செயலாளர் லட்சுமி கோவிந்தராஜ் உணவு பாதுகாப்புத் துறை ஓட்டுநர் சக்தி 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மோகன் உடனிருந்து இறுதி நல்லடக்கம் செய்யப்பட்டது













