வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, மூலைகேட் பகுதியில், திருவண்ணாமலை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களின் பார்வையை கவரும் வகையில் இயங்கி வருகிறது பொன்னி இயற்கை அங்காடி.
இதன் உரிமையாளர் தற்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருபவர். பணியின்போது கூட, தன் ஊரில் பாரம்பர்ய நெல் சாகுபடி மற்றும் மதிப்புக் கூட்டல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
அங்காடியில் –
- 20-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய அரிசி வகைகள்
- அதில் தயாரிக்கப்பட்ட இட்லி மாவு, சத்துமாவு ரெடிமிக்ஸ், அவல், புட்டு மாவு
- கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள்
- சிறுதானிய கஞ்சி ரெடிமிக்ஸ், உளுந்து, பச்சைப்பயறு, காராமணி
- நாட்டுச்சர்க்கரை, செவ்வாழை, சிவப்பு கொய்யா உள்ளிட்ட இயற்கை பொருட்கள்
பாரம்பர்ய சுவையும், ஆரோக்கியமும் ஒரே இடத்தில் கிடைக்கும் ‘பொன்னி இயற்கை அங்காடி’ – ஒரு ராணுவ வீரரின் உழைப்பின் இனிய பலனாக திகழ்கிறது.













