அரை நூற்றாண்டு அதிசயம் – சூப்பர் ஸ்டாரின் ரஜா நடை!
“பலர் அதிசயங்களை நம்புவதில்லை… ஆனால் அதிசயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சாதாரண பேருந்து நடத்துநர் பெரிய மனிதர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வது அதிசயம்தான்” – ரஜினிகாந்த்
தன் வாழ்க்கையை அவர் “அதிசயம்” என கூறினாலும், அதன் பின்னால் உழைப்பும் திறமையும் பொறுமையும் கலந்த கதை இருக்கிறது.
🎭 Larger than Life லெஜண்ட்
தமிழ் ரசிகர்கள் மட்டுமே ஒரு மனிதரை, ஷூ பறந்து போய் எதிரியை அடித்து மீண்டும் காலில் மாட்டிக்கொள்வதை கூட, சந்தேகமின்றி ஏற்றுக்கொள்வார்கள் – அந்த மனிதர் ரஜினிகாந்த் தான்.
அரை நூற்றாண்டாக, அவர் பற்ற வைத்த நெருப்பு இன்னும் குறையவில்லை.
🎯 வில்லனிலிருந்து உலக நட்சத்திரம் வரை
1970களில் வில்லன் கதாபாத்திரத்திலிருந்து தொடங்கி, காதல், காமெடி, ஆக்ஷன் என எல்லா வகை பாத்திரங்களிலும் கை வைக்க, ரஜினி தனித்துவமான ஸ்டைல் மற்றும் ஸ்கிரீன் பிரசென்ஸ் மூலம் ரசிகர்களின் இதயத்தை கைப்பற்றினார்.
💰 வசூலின் சூப்பர் ஹீரோ
ரஜினி நடித்த எந்தப் படமும் தயாரிப்பாளரை நஷ்டத்தில் ஆழ்த்தியதில்லை.
‘பாபா’ படம் குறைவான வசூல் பெற்றபோதும், விநியோகஸ்தர்களுக்கு பணத்தைத் திருப்பி கொடுத்தது அவரின் நேர்மை.
50 ஆண்டுகளாக நம்பர் 1 நாற்காலியில் அமர்ந்திருப்பது – BOX OFFICE வெற்றி இல்லாமல் சாத்தியமல்ல.
❤️ எல்லோராலும் நேசிக்கப்படும் சூப்பர் ஸ்டார்
சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, ரஜினி மீது கொண்ட பாசம் தலைமுறைகளை கடந்து செல்கிறது.
அவர் YOUNG MAN, EVER MAN, இந்திய சினிமாவின் POWER HOUSE.













