80% ஊழியர்களை கோடீஸ்வரர்களாக்கிய Nvidia – “எங்க முதலாளி… நல்ல முதலாளி!”
வீடியோ கேம் சிப் உற்பத்தியில் முன்னணியில் திகழும் Nvidia நிறுவனத்தை, தைவானை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கர் Jensen Huang 1998 ஆம் ஆண்டு தொடங்கினார்.
இன்று, Google, Facebook, OpenAI போன்ற தொழில்நுட்ப அதிசயங்கள்கூட Nvidia சிப்களை நம்பி செயல்படுகின்றன. இந்த வலிமையான ஆதிக்கம், Jensen Huang-ஐ உலகின் பணக்காரர்களின் பட்டியலில் 6வது இடத்துக்கு உயர்த்தியுள்ளது. அவரது சொத்து மதிப்பு சுமார் ₹13 லட்சம் கோடி.
ஆனால், Jensen Huang-ஐ வேறுபடுத்தி நிறுத்துவது அவரது சொந்த செல்வம் அல்ல — அவரது ஊழியர்களின் செல்வம். Nvidia-வில் பணிபுரியும் 80% ஊழியர்கள் மில்லியனர்கள்; அதிலும் பாதி பேரின் சொத்து மதிப்பு $25 மில்லியன் (சுமார் ₹200 கோடி).
இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம், Jensen Huang தனது ஊழியர்களுக்கு அளிக்கும் சலுகைகள். குறிப்பாக, நிறுவன பங்குகளை சலுகை விலையில் வாங்கும் வாய்ப்பை வழங்கி, அவர்களை நீண்ட காலத்தில் செல்வந்தர்களாக மாற்றியுள்ளார்.
“நமது ஊழியர்களைப் பார்த்துக் கொண்டால், மற்ற எல்லாமே தானாகவே நல்லபடியாகும்” – Jensen Huang
42,000 ஊழியர்களின் மாதந்தோறும் ஊதிய விவரங்களை அவர் நேரடியாகச் சரிபாரிக்கிறார். இதற்காக சிறப்பு app-களையும் பயன்படுத்துகிறார்.
உலகில் அதிக பணக்காரர்களை உருவாக்கிய CEO யாரெனக் கேட்டால், Jensen Huang தான் பதிலாக வரும் என அவர் பெருமையுடன் கூறுகிறார். Nvidia ஊழியர்களும் ஒரே வார்த்தையில் சொல்வார்கள் –
“எங்க முதலாளி… நல்ல முதலாளி!”













