அலாஸ்காவில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 6 மாதங்களில் தாம் நடத்திய சமாதான முயற்சிகள் குறித்து பெருமிதம் தெரிவித்தார். “மிகக் குறுகிய காலத்திலேயே 6 பெரிய போர்களை நிறுத்தியுள்ளேன்” என அவர் வலியுறுத்தினார்.
31 ஆண்டுகளாக ருவாண்டா மற்றும் காங்கோ இடையே நீடித்து வந்த ஆயுத மோதலும், தன் முயற்சியால் நிறுத்தப்பட்டதாக டிரம்ப் கூறினார். மேலும், இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட கடும் பதற்ற சூழ்நிலையிலும் தாம் நடத்திய மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலம் நிலைமை கட்டுப்பாட்டுக்கு வந்ததாக அவர் நினைவூட்டினார்.
“அந்த நேரத்தில் 6 முதல் 7 ராணுவ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. இரு நாடுகளும் அணு ஆயுதங்களைத் தயாராக வைத்திருந்த நிலையில், உலகம் பெரும் அபாயத்தை சந்தித்தது. ஆனால் எங்கள் தலையீட்டின் மூலம் அந்தப் போர் விரிவடையாமல் தடுக்கப்பட்டது” என டிரம்ப் கூறினார்.
டிரம்பின் இந்தக் கூற்றுகள், அவர் சமீபத்தில் வெளிநாட்டு மோதல்களைத் தீர்க்கும் திறனை வலியுறுத்தி வழங்கும் தேர்தல் பிரச்சார உரைகளில் ஒன்றாகும்.













