புதிய பாரதம், ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – செங்கோட்டையில் 79ஆம் சுதந்திர தினக் கொடியேற்றம் செய்த பிரதமர் மோடி
2047க்குள் “வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற இலக்கை நோக்கி முன்னேறும் நாட்டில், இந்த ஆண்டு சுதந்திர தினம் “புதிய பாரதம்” எனும் கருப்பொருளில் கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிய ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியும் விழாவின் ஓர் அங்கமாக இடம்பெற்றது.
டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, பின்னர் செங்கோட்டைக்கு வந்து ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து, இந்திய விமானப் படையின் இரண்டு எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மலர்களை தூவினர்; இதில் ஒன்று தேசியக் கொடியையும் மற்றொன்று ஆப்ரேஷன் சிந்தூர் இலச்சினையுடன் கூடிய கொடியையும் ஏந்திச் சென்றது.
சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இவ்விழாவில், பிரதமர் மோடி தனது 12வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.













