1806-ல் சென்னையில் கோமதி செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த வளமான குடும்பத்தில் பிறந்த கஜுலு லட்சுமிநரசு செட்டி, திண்ணைப் பள்ளியில் கல்வி கற்று, தானாகவே ஆங்கிலத்தைப் பயின்று அறிவை வளர்த்தார். எளிமையான உடை, கம்பீரமான தலைப்பாகை, நெற்றியில் ஸ்ரீ வைணவ நாமம் எனத் தோற்றமளித்த அவர், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
1840களில் இந்தியர்களுக்கென சொந்த அச்சகம் கூட இல்லாத காலத்தில், 1857 எழுச்சிக்கு முன்னதாகவே சென்னையில் “இந்து” அச்சகம் தொடங்கி, ‘மதியம்’ இதழை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் வெளிவந்தார். மாதம் மூன்று முறை வெளிவந்த இந்த இதழின் நோக்கம் – “ஹிந்துக்களின் நிலையை மேம்படுத்துவது.”
“இந்தியப் பத்திரிகைத் துறையின் தந்தை” என அழைக்கத் தகுதியான இவர், மெக்காலே கல்வி முறைக்கு மாற்றாக பாரத பாரம்பரியக் கல்வியை வலியுறுத்தினார். தேசத்தையும் தர்மத்தையும் காக்கும் குரலாக வாழ்ந்த அவர், இந்தத் துவாவின் முதல் குரலாக நினைவுகூரப்படுகிறார்.













