79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டினருக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலான ஆப்ரேஷன் சிந்தூர் நாட்டின் வீரத்தையும், ஆயுதப்படைகளின் தயார்தன்மையையும் உலகுக்கு எடுத்துக்காட்டிய வரலாற்றுச் சான்று என பாராட்டினார்.
அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமும் மனிதாபிமானமற்றதும் என அவர் கண்டனம் தெரிவித்தார். மக்களின் உயிர், பாதுகாப்பிற்காக இந்தியா எப்போதும் தயக்கமின்றி பதிலடி கொடுக்கும் என்றும், நம்மை பிளவுபடுத்த நினைக்கும் சக்திகளுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் சரியான பதிலாக அமைந்தது என்றும் அவர் வலியுறுத்தினார்.













