தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை வெளிச்சமிட “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” என்ற கேள்வித் தொடரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின் கூறினாலும், சுமார் 100 முக்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்காமல், அடக்குமுறையில் ஈடுபட்ட திமுக அரசின் நடத்தை மக்கள் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
தொடரின் முதல் பதிவாக, திமுக தேர்தல் அறிக்கையிலுள்ள வாக்குறுதி எண் 285-ஐ முன்வைத்து, அதை மக்களிடம் பரவலாக எடுத்துரைக்க பாஜக தொண்டர்களை அவர் அழைத்துள்ளார். விரைவில் மற்ற நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் வெளிப்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.













