திருச்சியிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள பூலாங்குளத்துப்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாலை, குடிநீர், தெருவிளக்கு, பள்ளி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுகின்றன. சமீபத்தில் போடப்பட்ட தார் சாலைகள் சேதமடைந்து, குண்டும் குழியுமான நிலையில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. மழைக்காலங்களில் பாதாளச் சாக்கடை இல்லாமை காரணமாக கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதால் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. மாதத்திற்கு பத்து நாட்கள் மட்டுமே குடிநீர் வழங்கப்படுவது, சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி மையத்தில் விஷ ஜந்துக்கள் தோன்றுவது போன்ற பிரச்சினைகளால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.













