திண்டுக்கல் நவம்பர் 1
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி லயோலா டெக் பள்ளியின் உள் அரங்கத்தில் நடைபெற்றது .

பள்ளி இயக்குநர் கிளாட்வின்,முதல்வர் நான்சி விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்கள்…

இந்த போட்டியில் 8 அணிகளாகக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.
இதில் 4 அணிகள் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற நான்கு அணிகளுக்குள் போட்டி நடத்தப்பட்டது..
இரண்டு அணிகள் சிறப்பாக விளையாடி இறுதி சுற்றுக்குச் சென்றனர்.

அவர்களுக்கு மஞ்சள் மற்றும் சிவப்பு நிற அணிகளாக விளையாடினர்..
பெண்களின் இரு அணியினரும் இறகு பந்தை பின்னோக்கி தள்ளியும் முன்னோக்கித் தள்ளியும் அழகாகவும் ஆர்வமாகவும் விளையாடினர்.

இறுதி சுற்றில் மஞ்சள் நிற அணியினர்
15: 13 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றனர்.

விளையாட்டு போட்டியினை ஆசிரியர்கள் பள்ளி ஊழியர்கள் மற்றும் பெஸ்கி கல்லூரியின் முன்னாள் அருட்தந்தைகள் என ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்

மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு கர ஒலி எழுப்பி உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.
வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கு பள்ளியின் விளையாட்டு விழாவின் போது சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பள்ளி இயக்குனர் கிளாட் வின், பள்ளியின் முதல்வர் நான்சி பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டியின் நன்றியுறையை வழங்கினர் ..

வருகின்ற நவம்பர் 8ஆம் தேதி லயோலா டெக் பள்ளியின் விளையாட்டு விழாவிற்கு அனைவரைரும் வருகை தர அன்போடு அழைத்தனர்……
விழா இனிதே நிறைவுற்றது!














