திண்டுக்கல் மாவட்டம் கம்பிலியம்பட்டியில் அமைந்துள்ள தனியார் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 600 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்குருச்சி வனப்பகுதி வனக்காவலர் சிபியா கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரங்களின் சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தார்
மேலும் நிர்வாகி ராஜராஜேஸ்வரி, கல்வி இயக்குநர் ரோட்டேரியன் ஷேர்லி ஜேசுராஜ் , ரோட்டேரியன் பி.பி. பி.எச்.எப். ஏ. கிறிஸ்டோபர், கராத்தே மாஸ்டர் ரோட்டேரியன் சிவசுப்ரமணி, ரோட்டேரியன் பாஸ்கரன், மற்றும் ரோட்டேரியன் ரமேஷ் (சூப்பர் டிவி) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ரோட்டேரியன் பி.எச்.எப். எம். சிவசிதம்பரம் (தலைவர்) மற்றும் ரோட்டேரியன் பி.எச்.எப். கே. துளசிதாஸ் (செயலாளர்) ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களோடு புங்கை, முகிழம், பாதம், தேக்கு, மகோகனி, நாவல் செம்மரம், நெல்லி, குமிழ் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டனர்












