திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அக்டோபர் 11, 2025 அன்று நடைபெற்ற “ஆர்ட் கார்னிவல் 2025” விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவை பி.எஸ்.என்.ஏ கல்லூரி, ரொட்டரி கிளப் ஆஃப் திண்டுக்கல் குயின் சிட்டி, பிக் டி இவெண்ட்ஸ், மற்றும் திண்டுக்கல் வ்லாக்ஸ் ஆகியவை இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன.

மொத்தம் 11 பள்ளிகள் மற்றும் அகாடமிகள் கலந்து கொண்டு, 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக 11 விதமான போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்திய லொயோலா டெக் பள்ளி, மொத்தச் சாம்பியன்ஷிப் வென்று, ரூ. 10,000 பணப் பரிசையும் முதல் பரிசையும் கைப்பற்றியது.

விழா முழுவதும் மாணவர்களின் உற்சாக பங்கேற்பும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உறுதுணையும் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தது.
இந்த பரிசினை ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல் குயின் சிட்டி நிர்வாகிகள் மற்றும் Big D Eventz பவுண்டர் லிவியா தினேஷ், Co- Founder தினேஷ் ரசின், CEO அருண், HR கேத்ரின் ஹில்டா, திண்டுக்கல் விலாக்ஸ் நிறுவனர்கள் ஆறுமுகம், யோகேஷ் வழங்கினர்.

இந்த நிகழ்வை பாராட்டும் விதமாக பள்ளி இயக்குனர் பாதர் கிளாட் வின்
பள்ளி முதல்வர் நான்சி இருவரும் வெற்றி பெற்ற, மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு தெரிவித்து சிறப்புரையாற்றினார்கள்..













