மதுரை மாவட்டம் பாளமேடு வட்டாரத்திற்கு கிராம தங்கள் பயிற்சிக்கு காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் களஞ்சிய உறுப்பினர்களுக்காக வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் கௌதமன், போற்றி செல்வன், இளஞ்செழியன், சஞ்சீவ், எழில் செல்வன், ஸ்ரீ அக்க்ஷன் ஆகியோர் பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு பயிற்சி நிகழ்ச்சியை நடத்தினர்.
பெண்களுக்காக மதிப்புக்கூட்டுதல் மற்றும் தொழில் முனைவுத்திறன் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, ஜாம் & ஜெல்லி தயாரிப்பு, டுட்டி-ஃப்ருட்டி தயாரிப்பு உள்ளிட்ட பல தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, புதிய அறிவுரைகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பற்றி பயனுள்ள தகவல்களை பெற்றனர். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய இப்பயிற்சி அனைவருக்கும் சிறந்த அறிவூட்டும் நிகழ்வாக அமைந்தது.













