திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் மாணவர்கள் கௌதமன், இளஞ்செழியன், சஞ்சீவ், போற்றி செல்வன், எழில் செல்வன், ஸ்ரீ அக்க்ஷனா ஆகியோர் பாலமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி, மறுஉற்பத்தி செய்யும் விழிப்புணர்வை வழங்கினர்.
இவ்விழிப்புணர்வில், பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புற இடங்களில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து, பயன்படும் மற்றும் பயன்படாத பொருட்களை தனித்தனியாக பிரித்து வைப்பது குறித்து விளக்கப்பட்டது. மேலும், சுற்றியுள்ள கடைகளிலும் இதே முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தினர்.இதன் மூலம் கிராமப்புற சுற்றுச்சூழல் பாதிக்காமல், குப்பைகளை மறுஉற்பத்தி செய்து மீண்டும் சமூக நன்மைக்குப் பயன்படுத்தலாம் என மாணவர்கள் வலியுறுத்தினர்.













