மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் பாலமேடு கிராமத்தில், மறு உற்பத்தி ஆற்றல் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் மாணவர்கள் கௌதமன், போற்றி செல்வன், இளஞ்செழியன், சஞ்சீவ், எழில் செல்வன், ஸ்ரீ அக்க்ஷன், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் செயல்பாட்டு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்நிகழ்வில் சூரிய சக்தி பம்புசெட், சூரிய உலர்த்தி கூடாரம் ஆகியவற்றின் பயன்பாடு, மானிய விவரங்கள் மற்றும் வேளாண் துறையில் பெறும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. மேலும் சூரிய ஒளி பொறி மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை, குறிப்பாக தேங்காய், காய்கறி மற்றும் பழங்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், வெளிச்சத்தை ஈர்க்கும் பூச்சிகள் மற்றும் வண்டுகளை தடுக்கும் பயன்பாடுகள் பற்றியும் மாணவர்கள் செயல்முறையாக எடுத்துக்காட்டினர்.
இந்நிகழ்ச்சி மூலம் விவசாயிகள் மறு உற்பத்தி ஆற்றலின் பயன்களை அறிந்து பயனடைந்தனர்.













