திண்டுக்கல், சாணார்பட்டி பகுதியை சேர்ந்த சுலைமான்சேட் வியாபாரி. இவருடைய ‘வாட்ஸ்-அப்’-க்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் இணையதளம் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்று வந்ததை தொடர்ந்து சில நிமிடங்களில் ‘வாட்ஸ்-அப்’ மூலம் அவரை சிலர் தொடர்புகொண்டு தாங்கள் கூறும் முறைப்படி ‘வாட்ஸ்-அப்’ குழுவில் இணைந்து ஆன்லைன் வர்த்தகம் செய்தால் அதிகளவு சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறியதை நம்பி சுலைமான் சேட், சில வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக ரூ.8 லட்சத்தை அனுப்பினார் தொடக்கத்தில் வருமானம் வந்தது.
அதன் பிறகு வருமானம் வருவது நின்று போனது. இதனால் சந்தேகமடைந்த ‘வாட்ஸ்-அப்’ குழுவில் இருப்பவர்களை தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் அந்த குழு முடக்கப்பட்டுவிட்டது
மர்ம நபர்கள் அவரை பண மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வியாபாரியிடம் பணம் பெற்று மோசடி செய்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













