திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி, பூசாரிபட்டியை சேர்ந்த மகாராஜன் என்பவரை கொலை செய்த வழக்கில் நத்தம் போலீசார் ஞானசேகரன், ராஜேந்திரன், குமரேசன், செந்தில் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் சூசைராபர்ட் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அவர்கள், ஞானசேகரன், ராஜேந்திரன், குமரேசன், செந்தில் ஆகிய 4 நாலு பேருக்கு ஆயுள் தண்டனை உடன் கூடிய 3 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
R. மோகன்கணேஷ்
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்













