மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தைச் சேர்ந்த தேவசேரி ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் மதுரை மாவட்ட ஆட்சியர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷன், வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை துறை அதிகாரிகள், ஊராட்சி செயலாளர், பொறியாளர் மற்றும் கிராம வளர்ச்சி துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கிராம மக்கள் முன்வைத்த குறைகளை மாவட்ட ஆட்சியர் கவனித்து, அவற்றிற்கு உடனடி நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளை வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் மாணவர்கள் கௌதமன், போற்றி செல்வன், இளஞ்செழியன், சஞ்சீவ், எழில் செல்வன், ஸ்ரீ அக்க்ஷன் , ஆகியோர் பாரம்பரிய நெல் வகைகள், ஏழு வகையான கரிம திரவங்கள், பனை இலை கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தினர். மேலும், இயற்கை விவசாயத்தின் அவசியம் மற்றும் பயன்களை மக்களுக்கு விளக்கினர்.
கண்காட்சியை பார்வையிட்ட சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. வெங்கடேஷன், “இந்த முயற்சிகள் மேலும் விரிவடைந்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் இணைந்து பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்” என்று ஊக்கமளித்தார்.
இதன் மூலம் அங்கு கூடியிருந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு இயற்கை விவசாயத்தின் மீது விழிப்புணர்வு ஏற்பட்டு, பயன்பெறும் வகையில் அமைந்தது.













