திண்டுக்கல் அர்னால்டு மல்டி ஜிம் சார்பில் 50-ம் ஆண்டு பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவிலான அமேச்சூர் ஆணழகன் போட்டி நடைபெற்றது. மிஸ்டர் ஆர் எம் எஸ் கிளாசிக் ஆணழகன் போட்டி நடைபெற்றன.
திண்டுக்கல், சின்னாளப்பட்டி, நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் இருந்து 15-க்கு மேற்பட்ட உடற்பயிற்சி கூடத்தில் இருந்து 150 க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டிகள் எடை பிரிவில் 50,55,60, 65,70, 75 80, 80 கிலோவுக்கு மேல் என ஒவ்வொரு பிரிவுகளாக சப் ஜூனியர், ஜூனியர் சீனியர், மாஸ்டர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் உடற்கூறு, உடல் அமைப்பு, தசை அமைப்பு ஆகியவற்றை வைத்து மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக தங்கப்பதக்கம், கேடயம், ரொக்க பரிசு ரூ.1500 ஆணழகன் ரிப்பன் அணிவிக்கப்பட்டது. 2-ம் பரிசாக ரூ.1000 மற்றும் வெள்ளி கேடயம், மூன்றாம் பரிசாக ரூ.500 மற்றும் வெண்கலக் கேடயம் பரிசுகளாக வழங்கப்பட்டன.
தொடர்ந்து அனைத்துப் பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற போட்டியாளர்களை கொண்டு ஒட்டுமொத்த ஆணழகன் போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசாக ப்ரோ ஜோன் பிட்னெஸை சேர்ந்த விவேக் தனது உடற்கட்டு திறன்களை காட்டி முதல் பரிசாக ரூ.50,000, தங்க கேடயம், ஆணழகன் பட்டம் பெற்றார் . 2-ம் இடம் பிடித்த பிரபுவிற்கு ரூ.30,000 வெள்ளிக் கேடயமும், 3-வது பரிசாக யாசர் அராபத்துக்கு ரூ.10,000 மற்றும் வெண்கல கேடயமும் பரிசுகளாக வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 91 புள்ளிகள் பெற்ற அர்னால்டு மல்டி ஜிம் ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பை பெற்றது. 2-ம் இடப் கோப்பையை ஜெனிடிக் ஜிம் பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
நகர் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மிஸ்டர் திண்டுக்கல் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் ஆகிய பரிசுகளை வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க நடுவர்கள் சிவராமசுதன், ஜமால், பிரபா ஆகியோர் கலந்துகொண்டு மதிப்பெண்களுக்கு அளித்து ஆணழகன்களை தேர்வு செய்தனர்.
நிகழ்ச்சியில் ஆணழகன் போட்டிகளை பார்வையிட வந்த சிறுவன் இம்மானுவேல், சிறப்பு நிகழ்ச்சியாக தனது திறனை காட்டும் வகையில் உடற்கட்டுகளையும் காட்டி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் அர்ணால்டு மல்டி ஜிம் நிர்வாகி, ஜிம் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஜான் வில்லியம் லாரன்ஸ், ராஜ்குமார், சதீஷ்குமார் ஆகியோர் செயது இருந்தனர்.













