திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட S.P.பிரதீப், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி, சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார். மேலும் சிறப்பாக பணிரிந்த காவல்துறையினர் 133 பேருக்கும், நீதித்துறையினர் 5 அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை ஆட்சியர் சரவணன் வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்தம் 276 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
இவ்விழாவில், பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 109 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சரவணன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மாகாந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு ஆட்சியர் சரவணன் மாலை அணிவித்து, மலர் துாவி மாரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.













