சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் பாஜகவினர் தேசிய கொடி ஏந்தி பேரணி
திண்டுக்கல் பாஜக கிழக்கு மாவட்டம் இளைஞர் அணி சார்பாக நமது நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் அன்பு ஹரிஹரன் முன்னிலையில் பாஜகவினர் பேருந்து நிலையத்திலிருந்து மாநகராட்சி காந்தி சிலை வரை தேசிய கொடியை ஏந்தி பேரணியாக சென்றனர்.
இது வருங்கால சந்ததியினருக்கு தேசபக்தியை புகுத்தும் விதமாக இந்தப் பேரணி நடத்தப்பட்டதாக மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பு ஹரிஹரன் தெரிவித்தார்
இந்த பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்













