நமது நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திண்டுக்கல் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பாக அதிமுக பொருளாளர் சீனிவாசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் முன்னாள் மேயர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், அதிமுக திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட அதிமுக மேற்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்













