மதுரை தனக்கன்குளம் கிராம சபை கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி சிறுமிகளுடன் வந்து அதிகாரிடம் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தனக்கன்குளம் ஊராட்சியில் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது –
கிராம சபை கூட்டத்திற்கு மதுரை மாவட்ட சத்துணவு திட்ட உதவி இயக்குனர் வீரராகவன் ஊராட்சி செயலாளர் பிரபு மற்றும் சுகாதாரத்துறை சத்துணவு துறை நெடுஞ்சாலை துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் இருந்து கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

தனக்கன்குளம் கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு வசதிகளுக்கு மறுமூலம் கோரிக்கை விடுத்தனர்
தனக்கன்குளம் அம்பேத்கர் மதுரை சேர்ந்த சிறுமி முனீஸ்வரி பத்தாம் வகுப்பு மாணவி மற்றும் தனது பகுதியில் உள்ள சிறுமிகளுடன் வந்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு ஊராட்சி செயலரிடம் மனு அளித்தார்.
சிறுமி தனது பகுதியில் மின்விளக்கு சரியாக எரிவதில்லை என்றும் சிறுமிகளுக்கான பாலியல் தொந்தரவு ஏற்படுகிறது அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராமம்தோறும் விழிப்புணர்வு வாசகங்கள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார் அதனைத் தொடர்ந்து சத்துணவு திட்ட உதவி இயக்குனர் வீரராகவன் கூறுகையில் சிறுமிகளுக்கான பாலியல் தொந்தரவு குறித்து 10 98 நம்பரில் தங்களது புகாரே அளிக்கவும் எ
அது தொடர்பாக அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் மேலும் பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணர் வாசங்களை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் மேலும் தங்கள் அம்பேத்கர் நகர் பகுதிக்கான மின்விளக்கு வசதிகளைஏற்படுத்த உத்தரவிட்டார்.
தனக்கன்குளம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறுமிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி குறைகளை எடுத்துக் கூறியது மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியது
மேலும் இதே போல் தனக்குளம் திருவள்ளுவர் நகர் மேட்டு காலனி பகுதியில் சுமார் 12 கடையில் கட்டப்பட்டு மூன்று ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கின்றது இது குறித்து பல்வேறு முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரகாஷ் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாத நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.
மேலும் தனக்கன்குளம் வசந்த விலாஸ் பகுதியை சேர்ந்த சீதாராமன் கூறுகையில்
தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக எங்கள் பகுதியில் சாலை மற்றும் சாக்கடை வசதிகள் இல்லை இது குறித்து பல்வேறு முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போது வரை நம்புகிறோம் எனக் கூறினார்













