மதுரை மாவட்ட அலங்காநல்லூரில் முதலமைச்சரின் உழவனைத்தேடி திட்டம் வேளாண்மை துறைமூலம் ஊர்சேரி கிராமத்தில் அப்பகுதி
விவசாயிகளுக்காக நடைபெற்றது.
இந்த
நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்,
வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் அதன் தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் நேரடியாக
கிராமத்திற்குச் சென்று
விவசாயிகளிடமிருந்து கேள்விகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டு தீர்வுகளை
வழங்குவது ஆகும்.
காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பி.எஸ் .சி. வேளாண் இறுதி
ஆண்டு படிக்கும் மாணவர்கள் கெளதமன் , போற்றி செல்வன், இளஞ்செழியன், சஞ்சீவ் , எழில் செல்வன், ஶ்ரீஅக்க்ஷன் இந்த நிகழ்ச்சியில் கலந்து
கொண்டனர் . அவர்கள் விவசாயிகளுக்கு பஞ்சகாவ்யா மற்றும் மீன்
அமிலம் தயாரிக்கும் முறைகள் மற்றும் அவற்றின் பயன்களை விரிவாக
விளக்கி கூறினர்
மேலும், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்
குறித்தும்
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு செய்தனர் . ரசாயன பயன்பாட்டை
குறைத்து, சுற்றுசூழல் நடப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று
வலியுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சி விவசாயிகள் இடையே அறிவு
பரிமாற்றத்துக்கு வழிவகுத்து, இயற்கை விவசாயத்திர்க்கு
ஊக்கமளித்தது.













