திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் கௌதமன், போற்றி செல்வன், இளஞ்செழியன், சஞ்சீவ், எழில் செல்வன், ஸ்ரீ அக்க்ஷன் ஆகியோர் அலங்காநல்லூர் மணி வெண்டை நிலத்தில் மஞ்சள் நரம்பு மொசைக் நோய் பாதிப்பு அடைநீத பயிருக்கு உதவி வேளாண்மை அலுவலர் இந்திரஜித் அவர்களுடன் இணைந்து நோய் தடுப்பு மற்றும் செயல்விளக்கம் வழங்கினர்.
மாணவர்கள், பி எம் வி எம் வி நோய்க்கு முக்கியமான வெள்ளை பூச்சி பற்றிய விளக்கத்தையும், அதைத் தடுக்கும் இயற்கை முறைகளையும் அறிமுக படுத்தினார்கள்.
மஞ்சள் ஒட்டும் பொறி – வெள்ளை பூச்சி பரவலைத் தடுக்க வேப்பம்–மிளகாய்– பூண்டு கரைசல் – இயற்கை பூச்சி விரட்டி
இவற்றின் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகளை நேரடியாக செய்து காட்டினர். மேலும், இரசாயன பூச்சிக்கொல்லிகள் அதிகப்படியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க, இயற்கை மற்றும் குறைந்த செலவிலான முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இம் முயற்சியால் வெண்டையின் மகசூல் அதிகமாக கிடைத்க்க பெற்றார்.













