தஞ்சை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மாவட்ட வருவாய் அலுவலர்
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி, மேலும் சிறப்பாக பணிரிந்த காவல்துறையினர் நீதித்துறையினர் அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை ஆட்சியர் வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை சிறப்பாக பணியாற்றதற்கு பாராட்டு சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
சுதந்திர தின விழாவில் வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.













